சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000
Wednesday, September 12, 2012
டைடல் பூங்காவில் பணி டிப்ளமோ படித்தவர்களுக்கு
சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000
காலாண்டு தேர்வு இன்று தொடங்கியது

காலாண்டு, அரையாண்டு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இதனால் பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் சந்திக்க நேரிடுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்17ம் தேதி கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்கிறார்
திருவனந்தபுரம்: வரும் 17ம் தேதி கூடங்குளத்திற்கு சென்று அங்கு நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கேரள முன்னாள் முதல்வரும், சிபிஎம் தலைவருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

அதைப் பார்த்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அணு உலைகளால் பூமி்ககு ஏற்படும் ஆபத்துகளை மனிலா மோகன் தனது படத்தில் அழகாக காண்பித்துள்ளார். அவர் ஆதாரங்களுடன் இந்த ஆவணப் படத்தை எடுத்துள்ளார். அணு உலைகளால் நன்மையை விட ஆபத்து தான் அதிகம் என்பதால் பல நாடுகள் அவற்றை புறக்கணித்துவிட்டன.
பரங்கிப்பேட்டை கோட்டாத்தங்கரைத் தெருவில் இறப்பு செய்தி
கோட்டாத்தங்கரைத் தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைகாயர் அவர்களின் மகளாரும் M.A. முஹம்மது ஜாப்பர் அவர்களின் சகோதரியும், ஹிம்மத், முஹம்மது ரஃபி இவர்களின் தாயாரும், நூருல் ஆலம், மாலீக் இவர்களின் பெரிய தாயாரும் ஆகிய ஃபரிதா பேகம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.
இன்ஷா அல்லாஹ் இன்று (12/09/2012) காலை 10 மணிக்கு நல்லடக்கம் கிளுர் நபி பள்ளியில்
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பரங்கிப்பேட்டை:இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் கூட்டம்!
பரங்கிப்பேட்டை: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரங்கிப்பேட்டை ஜாமிஆ அப்பாபள்ளியில் நடைப் பெற்றது. இக்கூட்டத்திற்கு இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் S.M. பாக்கர், துணைத் தலைவர் முனீர், மாநிலப் பொருளாளர் தொண்டியப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய கு. நிஜாமுத்தீன், ஒத்த கருத்துகொண்ட கொள்கைவாதிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சிதைவு – பிரிவினை குறித்து பேசியதில், சத்தியத்தை நிலைநிறுத்த கட்டமைப்புடன் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
தொண்டியப்பா பேசுகையில், “வளர்ந்து சமூகத்தை சூழ்ந்து நிற்கும் தொழிற்நுட்ப சாதனங்கள், சமூக வலைத்தளங்களால் ஏற்படும் கடும் கெடுதிகளை எடுத்துக்காட்டி எச்சரிக்கையாக இருக்க வேண்டியதின் அவசியத்தை கூறினார்.சிறப்புரையர்றிய S.M. பாக்கர், லா இலாஹா இல்லல்லாஹ் எனும் ஓரிறைக் கொள்ளை குறித்த செய்தியை நம்மை சுற்றி வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு எடுத்து சொல்லவேண்டியதன் அவசியத்தையும், சமுதாய பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.
பிறகு கடலூர் மாவட்ட செயலாளர் ஹமீது கவுஸ் இல்லத்தில் நடந்த சந்திப்பில் புதிய நகர நிர்வாகிகள் அறிமுகப்படுத்தட்டனர்.
புதிய நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: எஹயா மரைக்காயர்
து. தலைவர்: சாய மரைக்காயர்
செயலாளர்: ஷேக் அப்துல் காதர் (சேட்டு)
து. செயலாளர்: ஜாஃபர் அலி
பொருளாளர்: ஜெய்னுல் ஆபிதீன் மாலிமார்




நன்றி; mypno
பாகிஸ்தானின் கராச்சியில் தீ விபத்தில் சுமார் 112 பேர் பலி
ரஷ்யாவின் மிக வயதான(வயது 122) நபர் மரணம்
ரஷ்யாவின் டாகெஸ்தான் பகுதியைச் சேர்ந்த முகமது லபசானோவ்(வயது 122) என்பவர் காலமானார்.
படிப்பறிவு இல்லாத லபசானோவ் மரப்பட்டறையிலும், விவசாயத் தொழிலையும் செய்தவர். கடந்த மே மாதம் இவர் தனது 122வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இருப்பினும் இவர் பிறந்த ஆண்டுக்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலின் ஆட்சியில் டாகெஸ்தான் பகுதியில் இருந்தவர்கள் மத்திய ஆசிய பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
பின்னர் 50ம் ஆண்டுகளில் இவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர். பொதுவாக காகசஸ் மலை பகுதியையொட்டி வசிப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. இந்த வகையில் மீண்டும் டாகெஸ்தான் திரும்பிய, லபசானோவ் 122 வயது வரை வாழ்ந்துள்ளார்.
கடந்த வாரம் 7ஆம் திகதி இரவு இவர் இறந்ததாக இவரது உறவினர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த பெசிகூப்பர் என்பவருக்கு தற்போது, 116 வயதாகிறது. இவர் தான் உலகின் அதிக வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


அபுதாபியில் கட்டிடத்திற்கு நவீன முறையில் திரை சூரிய வெளிச்சத்திற்கு முற்றுப்புள்ளி
அபுதாபியில் பிரமாண்ட கட்டிடம் ஒன்றில் சூரிய ஒளியின் தாக்கம் பணியாளர்களை பாதிக்காமல் இருக்கும் பொருட்டு கட்டிடத்திற்கு பைபர் கிளாஸ் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் ‘அல் பாஹர் டவர்ஸ்’ என்ற கட்டிடம் உள்ளது.
மிகவும் வெப்பம் மிகுந்த நகரம் என்பதால் சூரிய வெளிச்சம் கட்டிடத்திற்குள் வேலை செய்பவர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருக்க பிரத்யேக, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது கட்டிடத்தை சுற்றிலும் போர்வை போல பிரமாண்ட சன் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தை விட்டு 6 அடி தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இப்போர்வை, காலை அலுவலகம் தொடங்கும் நேரத்தில், இந்த சன் ஸ்கிரீன் கிழக்கு பக்கத்தில் இருக்கும்.
வெயில் உச்சிக்கு ஏற, ஸ்கிரீன் மெல்ல நகர தொடங்கும். மாலை நேரத்தில் மொத்த ஸ்கிரீனும் மேற்கு பக்கம் போய்விடும்.
இவ்வாறு சூரியனின் இருப்பிடத்துக்கு ஏற்ப கம்ப்யூட்டர் உதவியுடன் சன் ஸ்கிரீன் நகர்கிறது. பைபர்கிளாஸ் பொருளால் இந்த ஸ்கிரின் தயாரிக்கப்பட்டுள்ளது.
கண்ணை கூசாத அளவுக்கு போதிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும்.
சூரிய ஒளி விழாததால் வெப்பமும் குறையும். இதனால், மின்விளக்கு, ஏசி செலவு கணிசமாக குறையும் என்கின்றனர்.
இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி தந்த ஏய்டஸ் நிறுவன பொறியாளர்கள் கட்டிடத்தை சுற்றி போர்வை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பணிகள் சில மாதங்களில் நிறைவடையும் என்கின்றனர்.

இஸ்லாத்திற்கெதிராக அமெரிக்க படம்: லிபியாவில் பயங்கர கலவரம்
அமெரிக்காவின் சாம் பேசிலி என்பவரும், குர்ஆனை எரித்து சர்ச்சைக்குள்ளான பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் இஸ்லாத்தையும் முகம்மது நபியும் விமர்சித்துள்ளதால் படத்தைப் பார்த்த அரேபிய வளைகுடா நாடுகள் கடும் கொந்தளிப்பில் உள்ளது.
நேற்று எகிப்து, லிபியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் முன்பு பயங்கர கலவரத்தை முஸ்லிம்கள் உண்டாக்கினார்கள்.
லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு துப்பாக்கிகள் மற்றும் ரொக்கெட் லாஞ்சர்களுடன் குவிந்த முஸ்லிம்கள், அடி தடியில் ஈடுபட்டனர்.
அமெரிக்க தூதரகத்தை அடித்து நொறுக்கினர். இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து லிபிய இராணுவம் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது.
நேற்று செப்ரெம்பர் 11 நியூயோர்க் வர்த்தக கட்டடம் தாக்குதல் நினைவு நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைந்து அந்நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றினர்.
இதையடுத்து உடனடியாக பொலிஸார் விரைந்து வந்ததால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.










தில்லியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை!
புது தில்லி, செப்.11: சுற்றுச் சூழல் விழிப்பு மற்றும் சுற்றுச் சூழல் காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக, தில்லியில் இனி பிளாஸ்டிக் பைகள், பேப்பர்கள் ஆகியவற்றுக்கு தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
Tuesday, September 11, 2012
கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை
பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கைபர், பக்துன்கவா மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்ததில் 1,500க்கும் அதிகமான வீடுகள் நொறுங்கி விழுந்தன. இதில் இதுவரை 80 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிந்து மாகாணத்தின் ஜகோபாபாத் நகரில் மட்டும் நேற்று 440 மி.மீ மழை பதிவானது. நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி செல்கின்றனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





நோவா ஸ்கோஷியாவில் கடும் வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று மட்டும் 75 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இன்று காலை நியுஃபவுண்ட்லேண்டை இந்த புயல் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு புயல்காற்று இணைந்து வீசுவதால் இன்றிரவு நிலைமை மிகவும் மோசமடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோஷியாவின் முதல்வர் டேரல் டெக்ஸ்ட்டர் கூறுகையில், டுரூரோ மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது தான் எங்களின் தலையாய பணி என்றார்.
டுரூரோவின் சட்டசபை உறுப்பினரான லெனோர் ஜானும், அவசர கால மேலாண்மைத் துறையின் அமைச்சரான ராஸ் லேண்ட்ரியும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
சாலைகளையும், பாலத்தையும் பொறியாளர் சோதனை செய்து வருகின்றனர். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றனர்.
வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரே அமெரிக்க டென்னிஸ் ஓப்பன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்றுள்ளார்.

சுமார் ஐந்து மணி நேரங்கள் நடந்த இந்தப் போட்டி, அமெரிக்க ஓப்பன் போட்டிகளில் மிக நீண்ட நேரம் நடந்த ஒரு சில போட்டிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டென்னிஸ் போட்டிகளில் "க்ராண்ட் ஸ்லாம்" என்று குறிப்பிடப்படும் மதிப்புமிக்க போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பனை பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் வீரர் ஒருவரும் வெல்லாத நிலையில், 76 ஆண்டுகளுக்குப் பின்னர் , அதை வெல்லும் முதல் பிரிட்டிஷ் வீரராகிறார் ஆண்டி மர்ரே.
இந்தப் போட்டியை வென்றதன் மூலம் மர்ரேக்கு, சுமார் இரண்டு மிலியன் டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கிறது.
கடைசியாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்ற பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர், பிரெட் பெர்ரி ஆவார். இவர் இந்தப் போட்டியை 1936ல் வென்றார்.
முழுவீச்சில் தயாராகும் இஸ்ரேல் ஈரானை தாக்க

இந்த அணுகுண்டு தங்கள் நாட்டுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்று இஸ்ரேல் கருதுகிறது. எனவே அதை அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீப காலமாக இஸ்ரேல் தனது படையை பல்வேறு வகையிலும் தயார்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அடிக்கடி ராணுவ ரகசிய கூட்டங்களும் நடந்து வருகின்றன. எந்நேரத்திலும் இஸ்ரேல் விமானங்கள் ஈரானுக்குள் பறந்து அணுஉலை மீது குண்டுவீசி தாக்கலாம் என்ற நிலை உள்ளது.
அதன் விமான படைகள் முழுவீச்சில் தயார் நிலையில் இருக்கின்றன. விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் தாக்கினால் உடனே இஸ்ரேல் மீது போர் தொடுத்து அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதற்கும் ஈரான் தயாராகி வருகிறது.
சிறைச்சாலை: ஆப்கானிடம் ஒப்படைத்தது அமெரிக்கா
தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் கடந்த 2001ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3000 தலிபான்கள் ஆப்கான் நாட்டிலுள்ள பக்ராம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2014ஆம் ஆண்டு நேட்டோ படையினர் ஆப்கானை விட்டு செல்ல உள்ளனர்.
போர் நிறுத்தத்திற்கு தயார் : மனம் மாறிய தலிபான்கள்
அல்கொய்தா தொடர்பிலிருந்து விலகி கொள்ளவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தலிபான்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா அமைப்பினர் தகர்த்ததைத் தொடர்ந்து, அவர்கள் பதுங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது அமெரிக்கா.
அக்கல்வி நிறுவனத்தினர் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஒமருக்கு நெருக்கமான 4 மூத்த தலைவர்களுடன் நேர்காணல் செய்ததில் இதுகுறித்து தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நால்வரில் இருவர் முந்தைய தலிபான் ஆட்சியில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள் ஆவர்.
இதைத் தொடர்ந்து ஆப்கானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான தலிபானுடன் கடந்த 11 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள தலிபான்கள் தயாராக உள்ளதாக லண்டனில் உள்ள றொயல் யுனைடட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்போது நடைபெற்று வரும் போரில், எந்தத் தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சுன்னத் செய்வதற்கு நீதிமன்றம் தடை: முஸ்லிம்கள் போராட்டம்
ஜேர்மனியில் சுன்னத் செய்வதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர்.
ஜேர்மனியின் கோலோன் நகர நீதிமன்றம் சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளதுடன், பெரியவர்கள் சம்மதத்துடன் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோலோன் நகர நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மற்ற நகரங்களில் உள்ள மருத்துவர்களும் சுன்னத் செய்வதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள மறுக்கின்றனர்.
சுன்னத் செய்வதற்குரிய தடையை நீக்க கோரி யூதர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து, பெர்லின் நகரில் நேற்று மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் படி கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
யூத சமுதாயத்தில் குழந்தை பிறந்த எட்டாவது நாளில் சுன்னத் செய்வது மரபாக உள்ளது.
முஸ்லிம்களில் , தகுந்த வயதில் சுன்னத் செய்வது வழக்கமாக உள்ளது.
திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை : சீர்காழியில் பதற்றம்
சீர்காழி, செப்., 11 : நாகை மாவட்டம் சீர்காழியில் மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜேந்திரன் (60) என்பவர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார். அவர் நேற்று இரவு மேலையூரில் தனது கடையின் முன்பு நின்று கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், முத்துராஜேந்திரன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. குண்டுகள் வெடித்ததை அடுத்து ஒரே புகை மண்டலமாக அப்பகுதி மாறியது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், முத்துராஜேந்திரனை வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திமுக பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலையூர் பகுதியில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் தடுக்க போலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)